செய்திகள்

தென்காசி; சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டம் சுரண்டை மார்க்கெட் இணைப்பு சாலையானது மக்களின் கோரிக்கையை ஏற்று 11 வருடத்திற்கு முன்பாக போடப்பட்டது. தற்போது இந்த இணைப்பு சாலை மிகவும் சேதம் அடைந்து, குண்டும் குளியுமாக மண் சாலையை போன்று காட்சியளித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும், மழை பெய்தால் இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மோசமான நிலையில் இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். மேலும் இதுவரை எந்த அரசு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை என்றும் பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதி விவசாயிகள் இந்த சாலை அமைப்பதற்கு இடம் கொடுத்ததாகவும், சுரண்டை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு மாணவர்களும், விவசாயிகளும் அதிக அளவில் அந்த சாலையை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். மேலும் இந்த இணைப்பு சாலை குண்டும் குளியுமாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், வாகன ஓட்டிகள் காயம் அடைந்ததாக தெரிவித்த பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னதாக இந்த இணைப்பு சாலையை புதுப்பித்து தரும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button