செய்திகள்

திருவள்ளூர் : ரீல்ஸ் எடுத்தவர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ், ஜெயக்குமார். இவர்கள் தச்சூர்-சித்தூர் பசுமைவழி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியில் பெங்களுரூவில் இருந்து வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரையும் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button