க்ரைம்
Trending

வாலிபரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

திண்டுக்கல், சீலப்பாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு குழந்தைபட்டியை சேர்ந்த குமரேசன்(41) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உலகநாதன் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் யோகேஷ்(27), பிச்சைமுத்து மகன் சரவணபாண்டி(21) ஆகிய 2 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button