செய்திகள்

கடலூர் : மண் எடுக்க லஞ்சம் கேட்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் – விவசாயிகள் புகார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பொன்னேரி ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துச் சென்ற விவசாயிகளின் 3 டிராக்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பின்னரும், காவல் ஆய்வாளர் இளவரசன், டிராக்டர்களை விடுவிக்காமல் தாமதம் செய்ததாக புகார் தெரிவித்த விவசாயிகள், லால்புரம் மேம்பாலத்தின் கீழ் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனிடையே, காவல் ஆய்வாளர் இளவரசன் விவசாயிகளிடம் பணம் கேட்பது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button