செய்திகள்

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் – தலைமைச் செயலாளர் ஆய்வு

சென்னை புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், பெருங்குடி மண்டலம் மயிலை பாலாஜி நகர் பகுதியில் கால்வாய், நாராயணபுரம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, துரைப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button