செய்திகள்

தென்காசி : காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – வாலிபர் பலி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவர் தனது குடும்பத்துடன் குற்றாலத்திற்கு குளிக்க சென்றார். அங்கு குளித்து விட்டு அனைவரும் ஆட்டோவில் அதிகாலையில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆய்குடி தனியார் கல்லூரி அருகே சென்றபோது திடீரென காட்டுப்பன்றி ஒன்று ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆட்டோ கவிழ்ந்து, ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ராஜகுரு மீது ஆட்டோ விழுந்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜகுருவின் குடும்பத்தினர் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜகுருவின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button