செய்திகள்

கோவை : குப்பை சேகரிக்க 43 பேட்டரி வாகனங்கள் – அமைச்சர் சம்பத்குமார்

கோவை மாநகரப் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியை மேம்படுத்தும் வகையில், 43 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் CSR நிதியில் இருந்து இந்த வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன.

ஒவ்வொரு வாகனமும் ரூ.2 லட்சம் மதிப்புடையது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கி.மீ. வரை இயங்கக்கூடிய இந்த வாகனங்கள், 500 கிலோ வரை குப்பையை கையாளும் திறன் கொண்டவை. ஒவ்வொரு வாகனமும் தினசரி சுமார் 250 வீடுகளில் இருந்து குப்பையை சேகரிக்கும்.

பின்னர் சேகரிக்கப்படும் குப்பைகள் ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு கவனக் கழிவு என நான்கு வகைகளாக பிரிக்கப்படும். இதனுடன், தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்ந நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ., கிரிபிரசாத், கலெக்டர் பவன்குமார், கமிஷனர் ரவி தேஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button