
திண்டுக்கல் மாவட்டம் கல்லுப்பட்டி சிறுமலை அடிவாரப் பகுதியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் இயற்கையாக வளர்ந்த சந்தன மரங்களை மர்மநபர் ஒருவர் தொடர்ந்து வெட்டி திருடி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் சந்தன மரத்தை வெட்டி திருட முயன்றபோது, விவசாயி மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் சுக்காம்பட்டியைச் சேர்ந்த தேக்கமலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து தேக்கமலையை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.