செய்திகள்

பணம் தர மறுத்த கடை முன்பு குப்பை கொட்டிய தூய்மை பணியாளர்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெற்கு வீதியில் ஸ்டிக்கர் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் தனியார் ஒப்பந்த பணியாளர் ஒருவர், கடை உரிமையாளரிடம் பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், தங்களது கடையில் இருந்து குப்பைகள் எதுவும் வெளியே கொட்டப்படுவதில்லை என்றும், எனவே பணம் வழங்க முடியாது என்றும் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த தூய்மை பணியாளர், தூய்மை பணியின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை வாகனத்தில் எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர் கடையின் முன்பு கொட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, கடையின் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button