
ஆவின் பால் கொள்முதல் விலை 38 ரூபாயில் இருந்து 44 ரூபாயாக ஆக உயர்த்தப் பட்டது. அந்த நிதியிழப்பை ஈடுகட்ட, அனைத்து மாவட்டங்களிலும், ஆவின் பால் விநியோகம் 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், செலவுகள் அதிகரிக்கும் போது வருவாயை பெருக்க நடவடிக்கை எடுப்பதை விட, உற்பத்தியை குறைப்பது எத்தகைய நிர்வாகம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் நந்தினி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பதற்காக ஆவின் விநியோகம் திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


