
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி கிராமத்தில், மின் மோட்டார் பழுதால் 3 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த கிராம மக்கள், காலிக்குடங்களுடன் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் அரூர் அருகே வேப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாம்பாடி பெருமாள் கோவில் பகுதியில், மின் மோட்டார் பழுதால் 5 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் கைவிடப்பட்டன.



