கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்டிரெண்டிங்
Trending

வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேட்டை கும்பல் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வனச்சரகர் தலைமையில் நத்தம் பிரிவு குட்டுப்பட்டி பீட் காப்புக்காடு எல்லையை ஒட்டி உள்ள சின்னையம்பட்டி காப்புகாடு அடிவாரம் கிராம புலம் எண்:௪௬௬/௩ட௨ ஸ்தலத்தில் வனஉயிரின குற்றங்கள் நடைப்பெற்றதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதனை தொடர்ந்து தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பாலித்தின் கவரால் வேயப்பட்டிருந்த இரும்பு தகர செட்டிற்குள் இருந்த நபரிகளிடம் சந்தேகத்தின் பெயரில் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் செட்டினை சோதனை மேற்கொண்டபோது ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கி மற்றும் இரும்பு கண்ணிகள் நரம்பு சுருக்கு வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கெண்டுவார்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியனாண்டி என்பவரது மகன்கள் பெ.மருதனாண்டி (58) , சுப்பிரமணி (53) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் குற்றம் செய்ததை அடுத்து வனக்குற்றச்சாட்டு எண் 07/2026 கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button