கோடியக்கரை அருகே படகு பழுதானதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த 6 ராமநாதபுரம் மீனவர்கள் பத்திரமாக மீட்பு.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பிரபாகரன் என்பவரது நாட்டுப் படகில், கடந்த 27-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதை தொடர்ந்து 29-ஆம் தேதி கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக படகின் இன்ஜின் பழுதானதால், 2 நாட்களாக கடலிலேயே தத்தளித்து கொண்டிருந்தனர். இது குறித்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தனியார் விசைப்படகு மூலம் நாகை மீன்வளத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட மீன்வளத் துறையினர், விசைப்படகில் சென்று மீனவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கியதோடு மட்டுமில்லாமல் அவர்களையும் பழுதான படகையும் பத்திரமாக மீட்டு நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : ராஜேஷ்

