
ஓசூரில் அரசு நிலங்களில் காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி.நாயஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மூலம் ஓசூர் சிங்காரவேலு முதலியார் தெருவை நேதாஜி சாலையுடன் இணைக்கும் பொது சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராமமூர்த்தி, சம்மந்தப்பட்ட தெருவில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய எம்.பி.யுமான கே.கோபிநாத் ஆக்கிரமித்து, இரும்பு கேட் போட்டுள்ளதுடன், கடைகளையும் கட்டியுள்ளாதாக தெரிவித்த்தார். மேலும், பதவி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, வருவாய் மற்றும் நகராட்சித் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. ஈநிலையில், ஓசூரில் அரசு நிலங்களில் காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.




