இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

திண்டுக்கல் மாநகராட்சியில் பிரதான குடிநீர் ஆதாரங்கள் ஆத்தூர் காமராஜர் அணை மற்றும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஆகும்.
அவற்றில் ஒன்றான ஆத்தூர் காமராஜர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிக்கப்படும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றிற்கு சராசரியாக பெறப்படும் 9.50 எம்.எல்டி குடிநீரை கொண்டு மட்டுமே நகரில் உள்ள 48 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
