பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு I.N.D.I.A என்று பெயர் சூட்டியதில் இருந்து பாஜகவுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது;
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது;
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது;
தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்!”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு