கோக்கு மாக்கு
Trending

புலியின் பற்கள் மற்றும் நகங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது – நீலகிரி மாவட்டம்

ரகசிய தகவலின் அடிப்படையில் வனவிலங்கு பொருட்களை வைத்திருந்ததாகக் மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சந்திரன் என்ற இருவரை குந்தா வனச்சரகரால் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மாமிச உண்ணியின் கோரை பற்கள் மற்றும் நகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர், லட்சுமணன் முள்ளிகூர் வனப்பகுதியில் இருந்து சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அழுகிய புலியின் சடலத்தில் இருந்து கோரை பற்கள் மற்றும் நகங்களை எடுத்ததாக ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் குரும்பா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தேன் சேகரிப்பதற்காக அடிக்கடி வனப்பகுதிக்கு செல்வது வழக்கம்.

அவ்வாறு இரு மாதங்களுக்கு முன்பு முள்ளிகூர் வனப்பகுதியில் தேன் சேகரிக்க லட்சுமணன் சென்ற பொழுது ஒரு ஓடை அருகில் இறந்த புலியின் சடலத்தை பார்த்துள்ளார். அப்பொழுது இறந்து அழுகிய நிலையில் இருந்த புலியின் உடலில் இருந்து கோரை பற்கள் மற்றும் நகங்களை உருவி எடுத்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின் அவரை அந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் அங்கு மக்கிய நிலையில் புலியின் பாகங்கள் பார்க்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் வனவிலங்கு தொடர்பான பொருட்களை வைத்திருந்ததற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர், உதகை தெற்கு வனச்சரக அலுவலர் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், ஊட்டி, வனக் கால்நடை உதவி மருத்துவர் மற்றும் எம்.டி.ஆர்., கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் NTCA நெறிமுறையை பின்பற்றி இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.


பிரேத பரிசோரனை முடிவில் புலி இயற்கையாக இறந்திருக்கிறது என்று தெரிய வந்தது. புலி இறந்து அழுகிய நிலையில் இருந்ததால் குற்றவாளி கோரை பற்கள் மற்றும் நகங்களை உருவி எடுத்து வந்துள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. மேலும் ஆய்வக பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button