அடுப்பை அணைக்காததால் விபரீதம் – 2 பேர் பலி
கொடைக்கானல் அருகே ‘பார்பிகியூ’ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் பலியான சோகம்.
சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டே சமைத்துள்ளனர்.
அப்போது அடுப்பை அணைக்காமல் தூங்க சென்றுள்ளனர்.
மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.