கோக்கு மாக்கு

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் முதியோர், மாற்றுத் திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, சாலை வசதி, வேளாண் பயிர்க் கடன்கள், தாட்கோ கடனுதவி, கூட்டுறவு பயிர்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 433 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button