க்ரைம்
Trending

படம் எப்படி இருக்கு!ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதர்வா..

அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள இதயம் முரளி படத்தை திண்டுக்கல்லில் ரசிகர்களுடன் பட குழு பார்த்து மகிழ்ந்தது.

தனது தந்தையும் நடிகர்மான முரளியின் நினைவாக இதயம் முரளி திரைப்படத்தில் அதர்வா நடித்துள்ளார். அவருடன் காயுடு லோகர், ப்ரீத்தி முகுந்தன், விஜய் டிவி ரக்சன், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், நட்டி நடராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளது. மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் பகத் பாசிலும் நடித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு வெற்றி படத்தை அதர்வா தந்திருக்கும் நிலையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை படம் பெற்றுள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளுக்கு சென்று படக்குழுவினர் ரசிகர்களை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திண்டுக்கல்லில் உள்ள உமா ராஜேந்திரா திரையரங்கில் இதயம் முரளி படம் ஓடிக் கொண்டிருந்தபோது நடிகர் அதர்வா உள்ளிட்ட படக்குழு திடீரென தியேட்டருக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். அதர்வாவை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய அதர்வா படம் எப்படி இருக்கிறது என ரசிகர்களிடம் கேட்க படம் சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் கூற மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் அதர்வா.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button