க்ரைம்
Trending

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி சி.ஐ.டி.யு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி சி.ஐ.டி.யு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விசைத்தறி மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசைத்தறி தொழிலுக்கு முக்கிய தேவையான சாயப்பட்டறைகளில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு, தமிழக அரசே முன்வந்து சுத்திகரிப்பு வளாகம் அமைத்துத் தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அரசு சார்பில் சுத்திகரிப்பு வளாகம் அமைக்கும் வரை, தற்போதுள்ள சாயப்பட்டறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள், சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி எழுப்பினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button