
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் கிளினிக் அமைத்து
நத்தம் முளையூரை சேர்ந்த 10- வகுப்பு வரை படித்த பாப்பாத்தி(60) என்பவர் மருத்துவம் பார்ப்பதாகவும் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குவதாகும் வந்த புகாரை தொடர்ந்து
திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்ட போது
பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்பட்டது தொடர்ந்து பாப்பாத்தியை பிடித்து நத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர் மேலும் மருந்து குப்பிகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நத்தம் போலீசார் பாப்பாத்தி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

