திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.
இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் அப்பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மொத்தம் 22 பேனர்கள் வைக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ரவுண்ட் ரோடு பகுதி முழுவதும் விதிகளை மீறி 80-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் அனுமதி பெற்றும் அளவில் விதிமீறல்களில் ஈடுபட்டு வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 10-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
