
நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகர் விக்ரமின் மகள், மறைந்த மு.க.முத்துவின் பேரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், அக்கரையில் உள்ள மு.க.முத்துவின் வீட்டிற்கு மகளை பார்க்க விக்ரம் சென்ற போது, அரிய வகை குரங்கை விலைக்கு விற்பதற்கு சிலர் வந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது லார் கிப்பான் எனப்படும் அந்த குரங்கை வீடியோ எடுத்து நடிகர் விக்ரம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பின்னர் குரங்கு வாங்க விருப்பமில்லாததால் அதனை திருப்பி அனுப்பி உள்ளனர். இந்நிலையில் குரங்கை உரிய ஆவணங்களுடன் விற்க வந்தார்களா என வனத்துறை அதிகாரிகள் நடிகர் விக்ரமிடம் விசாரனை நடத்தியுள்ளனர்.


