
தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் தான் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பித்து முதலமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு சுந்திந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்து, தான் கோட்டையில் கொடி ஏற்றுவதை பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, உயிர், உடமை என அனைத்தையும் இழந்து நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மக்கள் ஒன்று சேரும் இடத்தில் ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாம் உடைந்து நொறுங்கும் என்றும், அப்படி உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் என்று குறிப்பிட்ட அவர், அதனை நோக்கி தான் த.வெ.க அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும், கடந்த கால ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில், மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து த.வெ.க அரசின் 3 மாத ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பேசிய அவர், இந்த அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு செயல்படும் என தெரிவித்தார்.


