
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள முகத்துவாரம் என்பது கழிவு நீர் மற்றும் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர்கள் கடலில் கலக்கும் இடம். இந்த இடத்தில் இன்று ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த முக துவாரப் பகுதியில் கழிவு நீர்கள் கலந்து குறிப்பாக ஆயில் படலங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி வருவது வழக்கம். அந்த ஆயில் படலங்கள் வெளியேறியதால் மீன்கள் செத்து உள்ளனவா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

