
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவார பகுதியில் உள்ள அஞ்சுகுளிப்பட்டி காட்டுப்பகுதியில் சொக்கன்குளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம், அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த சந்தானம் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் திடீரென நாட்டு துப்பாக்கி வெடித்ததில் மாணிக்கம் படுகாயம் அடைந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார் சந்தானம் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து, துப்பாக்கி வெடித்ததா அல்லது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த வேறு ஏதேனும் வெடி பொருள் வெடித்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


