
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளிகூட இல்லை என்றும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கருத்துகளை தெரிவிக்கும் போது கவனமாக பேச வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம், 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக த.வெ.க. ஏற்காவிட்டால், கூட்டணியில் இருந்து விலகுவோம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வைகோ, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளிகூட இல்லை என தெரிவித்தார். மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பேசும் போது கவனத்துடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


