க்ரைம்

சென்னை : போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவர் கைது – 500 மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில், போரூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில், போலீசார் கோவூர் தைலந்தோப்பு அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில், நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சோதனையின் போது அவர்கள் கொண்டு வந்த பைகளில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, போரூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button