க்ரைம்

நீர்ப்பாசனத்தை பாதுகாக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பாரம்பரியமாக வற்றாத ஜீவநதி யாக ஓடிக்கொண்டிருந்த குடகனாறு இன்று வறண்டு பூவ நதியாக மாறி வரும் சூழலில் இன்று பல்வேறு சமூக நல அமைப்புகள் போராடி வருகிறது அதன் ஒரு பகுதியாக வேடசந்தூர் சார்பு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் தலைவர் பாலமுருகன் தலைமையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்பொழுது அவர்கள் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரை நரசிங்கபுரம் என்ற இடத்தில் சட்டவிரோதமாக தடுப்பணை கட்டி திண்டுக்கல் முதல் அரவக்குறிச்சி வரையிலான குடிநீர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை வெளியிடாமல் மற்றும் நிறைவேற்றாமல் தவித்து வருவதால் பெரிதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி வழக்கறிஞர் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து நீதிமன்றம் நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button