கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே பிலாங்காலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்று கோழியை பிடித்து விழுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கோழியை விழுங்கி நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.