க்ரைம்

இராமநாதபுரம் : அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து



இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து மாலை 32 பயணிகளுடன் அரசு பேருந்து பூசேரி வழியாக இராமநாதபுரம் சென்று கொண்டிருந்தது. அப்போது பூசேரி கிராம மயானம் அருகே எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும்போது, சாலையில் இருந்த சேறு மற்றும் சகதியில் சிக்கி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து,நேற்று பெய்த மழையால் சாலையோரப் பகுதியில் சேறும் சகதியுமாக இருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பயணிகள் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button