
முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை வழியாக செல்லும் மாயார் ஆற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில், தெப்பக்காடு அருகே பழங்குடியினர் கோவில் பகுதியில் மாயார் ஆற்றில் முதலை ஒன்று காய்ந்த மரத்தின் மீது நீண்ட நேரம் ஓய்வெடுத்தது. இதனை அப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்தனர். இதையடுத்து, மாயார் ஆற்றில் முதலைகள் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வனத்துறையினர், அவை மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் செல்வதையும், ஆற்றின் அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
