அரசியல்

திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் – அமைச்சர் நிர்மல்குமார்

கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால், திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் தான் என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் எங்குமே மின் பற்றாக்குறை இல்லை. தலைவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது 2 நிமிடங்கள் தான் மின்தடை ஏற்பட்டது. இன்றைக்கும் 1500 மெகாவாட் மின் பற்றாக்குறை இருக்கிறது. அதனை சரி செய்யும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மின் பற்றாக்குறை என்பது எல்லா மாநிலங்களிலும் உள்ளது தான். இதையடுத்து, காற்றாலை மின்சாரம் தட்டுப்பாடு காரணமாக 3500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வாங்க இருக்கிறோம்.

திமுகவின் கடைசி ஆயுதம் எப்போதும் ஆபாசம் தான். கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்றால் தரம்தாழ்ந்து பேசுவார்கள் என்று கூறினார். இதையடுத்து, மிசா, கச்சத்தீவு, சர்க்காரியா கமிஷன் என்பது 30, 40 ஆண்டுகளாக இருக்கும் சர்ச்சை பல ஆண்டுகளாக சட்டசபையில் பேசப்பட்ட ஒன்று ஏன் ஒரு விஷயம் சர்ச்சையாக இருக்கிறது. அங்கே ஏதோ ஒரு தவறு இருக்க போய்தானே சர்ச்சை இருக்கிறது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்ற சர்ச்சை இருக்கிறது. இப்போது உரிமை மீறல் என்று அவர்களே திமுகவை குறிப்பிடுகிறார்.மேலும், இந்த பிரச்னையை உயிர்ப்புடன் வைத்துள்ளனர் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button