க்ரைம்

சிவகங்கை : ஓட ஓட விரட்டி இரண்டு வாலிபர்கள் கொடூர கொலை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே குருந்தணி வாரியேந்தல் பகுதியில் தெய்வேந்திரன், அவரது நண்பர் பூப்பாண்டி ஆகிய இருவரும், நேற்று மதியம் காரில் பையூர் கொடிக்காடு வந்தனர். அங்குள்ள கண்மாய்க்கரை அருகே காரை நிறுத்தி விட்டு, கண்மாய் கரையில் அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி, முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் நம்பர் இல்லாத புதிய காரையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button