

திண்டுக்கல் மாவட்டம்
இந்த கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக ஐந்து கால பூஜைகள் நடைபெற்று நேற்று இரவு டன் நிறைவுற்று…
இன்று காலை ஆறாவது கால வேள்வி மற்றும் கோ பூஜை, லட்சுமி பூஜை, குபேர பூஜை முடிந்து இறுதியாக பூர்ணாகுதி செய்யப்பட்டு காலை 10.30 மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்ற கோவிலை வலம் வந்து வராகி அம்மன் ஆலய விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதன் பின் பக்தர்களுக்கு புனிதநீரை ட்ரோன்கள் மூலம் பிரசாதமாக தீர்த்தம் தெளிக்கப்பட்டது
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் பா விஜய் மற்றும் திரைத்துறையை சார்ந்தவர்கள் தொழிலதிபர்கள் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அதேபோல் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அவிநாசி திருப்பூர் ஈரோடு ஜெயங்கொண்டம் அரியலூர் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோதே முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி துணைவியார் இங்கு வந்து வழிபட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது