
பெருமத்தூர் கிளியூர் கிராமத்தில் இருந்து, பெரம்பலூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சின்னாறு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், பேருந்துக்கு வழிவிடாமல் சென்றனர் .
இதனால் பேருந்து ஓட்டுநர் மோகன், இருசக்கர வாகனத்தை முந்திச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர்கள், தேவையூர் அருகே பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல் நிலயத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவரது செல்போனை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலறிந்து வந்த போலீசார் தேவையூரைச் சேர்ந்த சதீஷ், சரவணன், ஜெகதீஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதை தொடர்ந்து, காயமடைந்த ஓட்டுநர் மோகன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

