
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கரூர்–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
கிரியாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற தர்மபுரியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சாலையின் வலதுபுறம் திடீரென சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

