செய்திகள்

தென்காசி : லாரியும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து – இருவர் பலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து சாத்தூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், திருவேங்கடம் பகுதியில் இருந்து கரிசல்குளம் நோக்கி இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டு விபத்துகுள்ளாயின.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லக்கனி மற்றும் அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த கலா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரான சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button