
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களின் வசதிக்காக, கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய பேருந்து சேவைகள் மற்றும் வழித்தட நீட்டிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில், பழைய பேருந்துகளுக்கு மாற்றாக 26 புதிய BS6 நகரப் பேருந்துகளின் சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, புதிய பேருந்துகளில் ஏர் சஸ்பென்ஷன், ரிவர்ஸ் கேமரா, GPS அடிப்படையிலான VLTD கருவி உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தால் மட்டுமே இயக்கப்படும் வகையில் பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட வருவாய் அலுவலர், துணை மேயர் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

