செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்களை முன்வைத்ததுடன், வீரமணி விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் தலையிட்டதாக குற்றம் சாட்டிய நயினார் நாகேந்திரன், அவர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, வீரமணி தொடர்பான நிகழ்ச்சியில் தவெக அமைச்சர்கள் பங்கேற்றது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக யார் தவறு செய்திருந்தாலும், கட்சி வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை எனக் கூறிய அவர், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர், ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரிக்கை தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாகவும் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button