நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி. இவர் திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், பிச்சைமுத்து 34, சின்னையன் 31, முத்துப்பாண்டி 28 மூன்று மகன்கள் உள்ளனர். இதே போல் வீரகாளியின் அண்ணன் சீனிவாசனுக்கு ரமேஷ் 42, ராஜூ 38 என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். சீனிவாசனின் இரண்டாவது மகன் ராஜூ தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள மருங்கூர் காராமணி தெருவைச் சேர்ந்த ஜெயபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனது பன்றிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை வீரகாளியின் மூத்த மகன் பிச்சைமுத்து ஜெயபாலிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ளார். இதனால் வீரகாளி, ராஜூ இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ராஜூ, வீரகாளிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து தகராறு முற்றிய நிலையில் ராஜூ மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வீரகாளின் வலது தோள்பட்டையில் வெட்டியுள்ளார். அதனை கண்ட வீரகாளியின் மனைவி தனபாக்கியம் அங்கு ஓடிவந்து தடுத்துள்ளார். இதனை அடுத்து பிச்சைமுத்து அந்த இடத்தை வாங்குவதற்கு முழு காரணம் நீதான் என கூறி தனபாக்கியத்தை தாக்கி அருகிலுள்ள குழாய் அடியில் வைத்து அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கு வந்த வீரகாளியின் மூன்றாவது மகன் முத்துபாண்டி அருகில் கிடந்த சிமென்ட் சிலாப்பை எடுத்து ராஜூவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து நிலைகுலைந்து ராஜூ ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த வீரகாளி, ராஜூயை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர். மருத்துவமனையில் ராஜூயை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார். தோள்பட்டையில் படுகாயம் அடைந்த வீரகாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவலறிந்து வந்த திருக்கண்ணபுரம் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த தனபாக்கியத்தின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு நாகை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாகை டி.எஸ்.பி சுப்ரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முத்துப்பாண்டியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கண் முன்னே தாய் கொலை செய்யப்பட்டதை கண்டு ஆத்திரமடைந்த தனபாக்கியத்தின் மகன் முத்துப்பாண்டி, ராஜ்குமாரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் திருமருகல் பகுதிகளில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்