- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டை மாயனூர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது பசு மாடு இன்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தது
2. அதே போன்று வேடசந்தூர் அருகே வெல்லம்பட்டி கிராம எல்லைக்குட்பட்ட கருப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிச்சை ராஜ் என்பவது மகன் பழனிமுத்து என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின்னில் தாக்கி இறந்துள்ளது .
வேடசந்தூர் தாலுகா பகுதியில் அடுத்தடுத்து இரண்டு மாடுகள் இறந்த தகவல் தெரிந்தவுடன் வருவாய் துறையினர் ஆய்வு செய்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் .
இந்த இரண்டு சம்பவங்களும் பேரிடர் மேலாண்மை விதிகளின் கீழ் வருவதால் இறந்த இரண்டு பசு மாடுகளையும் உடற்கூறு ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கால்நடை பராமரிப்பு துறையின் மருத்துவர்கள் வந்தவுடன் உடற்கூறு ஆய்வு நடைபெறும் என்றும் வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர் .