திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர்கசிவாக உருவாகி நீரோடைகளாக மாறி வனப்பகுதிகளில் வழியாக வந்து பண்ணைப்பட்டி, கோம்பை நீர் தேக்கத்திற்கு வந்துசேரும்.
திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட T.பண்ணைப்பட்டி கோம்பை – பச்சமலை செல்லும் வழியில் கரூரைச்சேர்ந்த குணசீலன் என்பவர் விவசாய நிலம் வைத்துள்ளார். அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டு பகுதியையும் பெருமளவில் ஆக்கிரமித்து செய்து வேலி அமைத்து தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்துள்ளார்.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கன்னிவாடி வனச்சரகம் மற்றும் மாவட்ட வனத்துறையினரிடம் புகார் அளித்ததை அடுத்து மலையில் இருந்து வரும் நீரோடையை மறித்து வனத்துறைக்கு கட்டுப்பட்ட காப்புகாட்டு பகுதிகளை ஆக்கிரமித்து ( 100 மீட்டர் நீளம் 35 மீட்டர் உயரம் அளவில் ) 2 தடுப்பணைகளை மிக பிரமாண்டமாக கட்டியுள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின்புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள் தங்களது உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர்
ஆய்வறிக்கையின் உண்மைத்தன்மையை கண்டறிய மாவட்டவனத்துறை அதிகாரி தலைமையில் நேரில் சென்று குணசீலன் நிலத்தில் கள ஆய்வு செய்தனர்
ஆய்வின்போது அவரது விவசாய நிலத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வனபகுதி வழியாக வரும் நீரோடை மறித்து 100 மீட்டர் நீளத்திற்கும், 35 மீட்டர் உயரத்திற்கும் இரண்டு மிகப்பெரிய அணைகளை கட்டி உள்ளார் என்பதும் இரண்டு அணைகள் கட்டியுள்ளதால் கோம்பை அணைக்குதண்ணீர் செல்லவில்லை அதேபோல் வன விலங்குகளுக்கு ஆங்காங்கே சிறு குளங்கள் மூலம் தண்ணீர் சேகரிக்கப்படும் பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தடுப்பணைகளால் கன்னிவாடி வனச்சரகப் பகுதிகளில் செல்லும் நீர்வழிப் பாதை முற்றிலும் தடைபட்டுள்ளது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் விவசாய நிலங்களில் அடிக்கடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஐலா IFS உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையிலான வனப்பணியாளர்கள் அந்த தடுப்பணைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தடுப்பணைகளை முற்றிலும் அகற்றி டி.பண்ணப்பட்டி கோம்பையில் உள்ள தடுப்பணைக்கு நீரோடை தங்கு தடையின்றி வந்தடையும் பட்சத்தில் மக்களின் குடிநீர் தேவை மட்டுமின்றி வன விலங்குகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் எனவும் இதனால் வனவிலங்குகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள்ளும்,விவசாய நிலங்குள்ளும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கன்னிவாடி வனச்சரக பகுதியில் உள்ள ஊமையாறு பீட் முழுவதும் ஆக்கிரமிப்பிற்குள்ளானதில் யானைகள் வாழ்விடம் மற்றும் வழித்தடம் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வரும் சூழலில் இது போன்று இன்னும் எத்தனை இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டறிய வேண்டும் என்றும் இதில் தொடர்புடைய அனைவர் மீதும் வன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காப்பு காட்டு பகுதியில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த இந்த சட்டவிரோத தடுப்பணைகள் விவகாரத்தில் பல்வேறு வனம் மற்றும் வருவாய் துறையினருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளதால் கொடைக்கனல் மன்னவனூர் பகுதியில் வன நிலங்களில் பல கோடி மதிப்புள்ள மரங்களை வெட்டி வனத்துறையினரே கடத்திய விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் இந்த விவகாரமும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினர் மத்தியில் புயலை கிளப்ப போகிறது என தகவல்