மேகதாது அணை விவகாரம் த.வெ.க.வின் விவகாரம் அல்ல தமிழ்நாட்டின் விவகாரம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் அமைப்பை தவிர சில ஊடுருவிகள் உள்ளே வந்ததன் காரணமாக போராட்டம் திசை திரும்பியதாக தெரிவித்தார். தொடர்ந்து, மேகதாது அணை விவகாரத்தில் அதிமுக திமுக பாமக என பாகுபாடு பாராமல் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், மேகதாது அணை விவகாரம் த.வெ.க.வின் விவகாரம் அல்ல தமிழ்நாட்டின் விவகாரம் என்று குறிப்பிட்டார். மேலும், விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர், சிறு குறு விவசாயிகள் என பாகுபாடு காண்பிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

