செய்திகள்

காட்டு தீயை கட்டுப்படுத்த வந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போது, 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலி.

கிரீஸ் நாட்டில் நிலவும் வெப்ப அலை காரணமாக, மேற்கு அட்டிகா பகுதியில்

காட்டுத் தீ பற்றி எரிகிறது. அந்த தீயைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 20-க்கும் மேற்பட்ட விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காட்டுத் தீயை அணைக்கும் போது, 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஏதென்ஸில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து, அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button