
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டீக்கடையில் பணியாற்றிய பெண், பள்ளி மாணவி உள்ளிட்ட 16 பேர் தீக்காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பலத்த தீக்காயமடைந்த 11 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், பெரம்பலூரில் கட்சி நிகழ்ச்சிக்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

