
சென்னை மாதவரம் பகுதியில் லாரி நிறுத்தும் இடத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மதியம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரும் கிளீனரும் லாரியின் உள்ளே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது அருகில் இருந்த ஓட்டுநர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் மீண்டும் இரவு 8 மணி அளவில் லாரி நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஒருவர் மீது ஒருவர் டீசலை ஊற்றி தீயை பற்ற வைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்த பிற ஓட்டுநர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டீசலை உடல் முழுவதும் ஊற்றி கொண்டிருந்த இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி, பின்பு இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரி முழுவதும் டீசல் ஊற்றி இருந்ததால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் பிற ஓட்டுநர்கள் அருகில் இருந்து மண் மற்றும் சோப்பு நுரை கலந்த தண்ணீரை லாரிக்குள்ளும் லாரியின் அடியிலும் போட்டனர். இதையடுத்து போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டபோது தற்கொலைக்கு முற்பட்ட லாரி ஓட்டுனரும் கிளீனரும் ரும் தந்தை மகன் என்பதும் இருவரும் மது போதையில் இருந்ததாகவும் தெரியவந்தது. மது போதையில் டீசலை ஊற்றி ஒருவரை ஒருவர் தீய வைத்து பற்ற வைக்க முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




