செய்திகள்

திண்டிவனம் : வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் சிலவட்டம் பகுதியில் இருந்து தீவனூர் கோவிலுக்கு திருமணத்திற்காக மணப்பெண்ணுடன் 20 பேர் மினி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே வரும்போது மினி வேன் பின்பக்க டயர் வெடித்ததில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அவர்களை வேனியில் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் மணப்பெண் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button