
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்தபடி வந்த இரண்டு இளைஞர்கள், அப்பகுதியில் ஆடுகளை திருட நோட்டமிட்டுள்ளனர். இதனை கவனித்த பொதுமக்கள், இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் பிடிபட்டவர் தர்மபுரியைச் சேர்ந்த கணேஷ் என்பதும், வேலூரில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய அவரது நண்பரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.